Friday, September 7, 2012

Folder களை தேவையான நிறத்தில் மாற்றுவதற்கு


உங்களது கணனியில் உள்ள Folder களுக்கு விதவிதமான கலர்களை தரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கோப்பை தேடுவது மிக எளிது.
உதாரணமாக புகைப்படங்களுக்கு நாம் சிகப்பு நிறத்தினை வைத்து விட்டால், புகைப்படம் உள்ள Folder களை எல்லாம் சிகப்பு நிறம் என கண்டுகொள்ளலாம்.
அதைப் போலவே நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட Folder களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என நிறங்களை கொடுத்து விட்டால் தேடுவதற்கு வசதியாக இருக்கும்.
1.5 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதனை நிறுவிய பின்னர், உங்கள் கணனியில் உள்ள Folder யை ரைட் கிளிக் செய்து ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் உங்களுக்கு வேண்டிய நிறத்தினை கிளிக் செய்து, மாற்றலாம்.

Read more ...

கணனியின் செயற்பாடுக​ளை கண்காணிப்ப​தற்கு

கணனிகளைப் பயன்படுத்தும் போது மேற்கொள்ளப்படும் குளறுபடிகள், தவறான பாவனைகள் போன்றவற்றை மிகவும் எளிதான முறையில் கண்காணிப்பதற்கு Super Silent Manager எனும் மென்பொருள் பயன்படுகின்றது.
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
இதன் மூலம் குழந்தைகள் கணனிகளைப் பாவிக்கும் போதோ அல்லது ஊழியர்களின் கணனிப் பாவனையையோ அல்லது ஏனைய குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடுகளையோ துல்லியமாக கண்காணிக்க முடியும்.
தவிர இம்மென்பொருளின் உதவியுடன் வெப் கமெரா மூலம் பயணம் செய்கையிலோ அல்லது அலுவலகத்திலிருந்தவாறோ கண்காணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more ...