Saturday, September 27, 2014

Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவதற்கு...

நமது கணணியின் முன் திரையில் உள்ள மென்பொருட்களுக்கான Shortcut Icon இல் அம்புக்குறி ஒன்று இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். இது சிலருக்கு வேண்டப்படாத ஒன்றாகக் கூட சிலவேளைகளில் அமையலாம். இது நீக்கப்பட்டால் நன்றாயிருக்குமென கூட சிலர் எண்ணியிருக்கலாம். எனவே அவ் அம்புக்குறி இருப்பதை விரும்பாதவர்களுக்காய் இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

இதற்கு முதலில் START இல் சென்று அங்கு தேடல் பகுதியில் “regedit”  எனக்கொடுத்து திறந்துகொள்ளவும். அல்லது START இல் சென்று RUN என்பதை கிளிக்செய்து “regedit” எனக்கொடுத்து திறந்துகொள்ளவும்.

பின்னர் இதிலே கீழ்காட்டிய ஒழுங்கில் சென்று “Explorer”” என்பதை அடையவும்.

 HKEY_CURRENT_USER\Software\ Microsoft\Windows\ CurrentVersion\Explorer


இப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு வலப்பக்கத்தில் உள்ள link என்பதை Right-Click செய்து Modify என்பதைக் கொடுத்து திறந்துகொள்ளவும். இப்போ விண்டோ ஒன்று திறக்கும் அதிலே கீழ் காட்டியவாறு இலக்கத்தை மாற்றியபின் OK பண்ணவும்.

இப்போ Shortcut Iconஇல் உள்ள அம்புக்குறியானது நீக்கப்பட்டுவிடும். 

Read more ...

சாதாரண DONGLE இல் CALL OPTION ஐ கொண்டுவருவது எப்படி ?

பல இணைய சேவை வழங்குனர்கள் (ISP உதாரணமாக Airtel , Dialog , Mobitel, Etisalat ,Hutch) போட்டி போட்டுக்கொண்டு Prepaid & Postpaid SIM அனைத்திற்கும்  இணையத்தை பயன்படுத்துவதற்கான டேட்டாக்களை வழங்கி வருகிறார்கள்.அந்த SIM ஐ Dongle மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் போட்டு நாம் பயன்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும்.
ஆனால் ஸ்மார்ட் போன்களின் விலை அதிகமாக இருப்பதனால் பெரும்பாலானவர்கள் Dongle ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.இதில் இணைய இணைப்பை மேற்கொள்ளவும் மற்றும் SMS  ஐ அனுப்பவும் பெறவும் மடடுமே முடியும். CALL எடுக்க முடியாது (இப்போது புதிதாக வரும் Dongle இல் மாத்திரமே CALL எடுக்கும் வசதி இருக்கிறது).
ஆனால்  இன்று நாம் பார்க்க போகும் Sun Broadband Wireless மென்பொருளை பயன்படுத்தி CALL எடுக்கும் வசதி இல்லாத Dongle இலும், CALL  எடுக்க முடியும். இதில் மேலும் பல வசதிகள் இருக்கிறது குறிப்பாக
  • CALL எடுப்பதற்கான வசதி இருக்கிறது (உங்களுடைய Dongle கணினியில் இணைத்து இருக்க வேண்டும்)
  • இணைய இணைப்பை மேற்கொள்ள முடியும்.
  • நீங்கள்   இணையத்தை பயன்படுத்தி கொண்ட விபரங்களை (நாள் , மாதம் , வருடம் அடிப்படையில் எந்த அளவு Download   மற்றும் Upload செய்யப்பட்டது என்று )அறிந்து கொள்ள முடியும்.
  • SMS களை அனுப்பவும் பெறவும் முடியும்.
  • Missed calls , Dialed Calls களையும் பர்க்க முடியும்.
Sun Broadband Wireless மென்பொருளை  Download செய்து கொளவதற்கு இங்கே  
Read more ...