Monday, September 16, 2013

கோப்புக்களை விரைவாக பிரதி செய்யவும் இடமாற்றவும் உதவும் மென்பொருள்

கணனிகளில் கோப்புக்களை பிரதி செய்தல் மற்றும் இடம்மாற்றுதல் போன்ற செயன்முறையானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
எனினும் பெரிய அளவு கோப்புக்களை இவ்வாறு பிரதி மற்றும் இடம்மாற்றம் செய்யும்போது அதிகளவான நேரம் எடுக்கின்றது.
இந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு தற்போது Ultracopier எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac OS இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள இம்மென்பொருளின் உதவியுடன் தேவைக்கு ஏற்றவாறு பிரதி செய்தலை இடையில் நிறுத்தி வைத்தல், மீண்டும் செயற்படுத்துதல் போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி



Read more ...

Tuesday, September 3, 2013

Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவதற்கு...

நமது கணணியின் முன் திரையில் உள்ள மென்பொருட்களுக்கான Shortcut Icon இல் அம்புக்குறி ஒன்று இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். இது சிலருக்கு வேண்டப்படாத ஒன்றாகக் கூட சிலவேளைகளில் அமையலாம். இது நீக்கப்பட்டால் நன்றாயிருக்குமென கூட சிலர் எண்ணியிருக்கலாம்.
எனவே அவ் அம்புக்குறி இருப்பதை விரும்பாதவர்களுக்காய் இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

இதற்கு முதலில் START இல் சென்று அங்கு தேடல் பகுதியில் “regedit”  எனக்கொடுத்து திறந்துகொள்ளவும். அல்லது START இல் சென்று RUN என்பதை கிளிக்செய்து “regedit” எனக்கொடுத்து திறந்துகொள்ளவும்.


பின்னர் இதிலே கீழ்காட்டிய ஒழுங்கில் சென்று “Explorer”” என்பதை அடையவும்.


 HKEY_CURRENT_USER\Software\ Microsoft\Windows\ Current Version\Explorer





இப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு வலப்பக்கத்தில் உள்ள link என்பதை Right-Click செய்து Modify என்பதைக் கொடுத்து திறந்துகொள்ளவும். இப்போ விண்டோ ஒன்று திறக்கும் அதிலே கீழ் காட்டியவாறு இலக்கத்தை மாற்றியபின் OK பண்ணவும்.

இப்போ Shortcut Iconஇல் உள்ள அம்புக்குறியானது நீக்கப்பட்டுவிடும். 
Read more ...

மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு.

தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச் சொல்லை மிக இலகுவாக இல்லாமற் செய்யமுடியும்.
1.கடவுச் சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் Hard Disk-ஐ வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும்.
2.இப்பொழுதது கணினியை Boot செய்யவும்.  (இதன்போது கடவுச்சொல் நீக்கவேண்டிய வன்றட்டு இரண்டாம் நிலை சாதனமாக இருக்க வேண்டும் – secondary hard disk)
3.கணினி இயங்கியதும் Mycomputer பகுதிக்கு சென்று இரண்டாம் நிலை வன்றட்டில் windows இயங்குதளம் நிறுவியிருக்கும் பகுதியை திறக்கவும்.
4. அதனைத்தொடர்நது windows->system32->config எனும் பகுதிக்கு செல்லவும்.
5.அங்கு காணப்படும் SAM.exe, SAM.log ஆகிய கோப்புக்களை அழித்துவிடவும்.
இப்பொழுது அக்கணினியிலிருந்து வன்றட்டை அகற்றி பழைய கணினியில் இணைத்து இயக்கவும். ஏற்கணவே நிறுவியிருந்த கடவுச் சொல் அகற்றப்பட்டு கணினி சாதாரணமாக இயங்கும்.
Read more ...