Friday, March 16, 2012

கூகுள் சேமித்து வைத்திருக்கும் உங்களது தகவல்களை நீக்குவதற்கு


கூகுள் நிறுவனம் கடந்த 1ம் திகதி முதல் புதிய Privacy Policy ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும்.

அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால், அதில் நீங்கள் புதியதொரு கணக்கினை உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜிப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப்படும்.
கூகுள் நாம் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் தகவல் தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
உங்கள் கூகுள் கணக்கில், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழைந்த பின்னர், https://www.google.com/history என உங்கள் உலாவியின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும் அல்லது கூகுள் சாதனங்களான கூகுள் ப்ளஸ் அல்லது கூகுள் தேடல் தளத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து Go to web history என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரிகள் மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம்.
இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது.
Read more ...

Chat for Google: நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு




இணையத்தில் பெரும்பாலான நபர்கள் உபயோகிப்பது ஜிமெயில் தான். அதே போன்று கூகுள் பிளஸ் தளமும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.

இவை இரண்டிலும் உள்ள ஒரு பொதுவான வசதி நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் chat வசதியாகும். இதுவரை இந்த தளங்களுக்கு சென்று தான் அதில் ஓன்லைனில் உள்ள நண்பர்களிடம் சாட் செய்து வந்தோம்.
இனி நீங்கள் சாட் செய்ய அந்தந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அந்த தளங்களை திறக்காமலே ஜிமெயில் மற்றும் கூகுள்+ நண்பர்களுடன் சாட் செய்யலாம்.
குரோம் பயனாளர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும்.
முதலில் கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து Chat for Google என்ற நீட்சியை நீட்சியை தரவிறக்கம் செய்து உங்கள் உலவியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
நீட்சி உங்கள் உலவியில் இணைந்தவுடன் குரோம் பார் அல்லது system tray பகுதியில் உள்ள ஐகானை க்ளிக் செய்யவும்.
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் கூகுள் கணக்கில் நுழைந்து இருந்தால் அந்த கணக்கில் உள்ள நண்பர்களை காட்டும். இல்லை எனில் கூகுள் கணக்கில் நுழைய Sign In வசதியை காட்டும்.
அதில் நுழைந்து உங்கள் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம்.
Read more ...

கூகுள் பிளசை தமிழில் மாற்றுவதற்கு




இன்றைய உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக இணையத்தளமான கூகுள் பிளஸ் தற்பொழுது 60 மொழிகளில் கிடைக்கின்றது.
குறிப்பாக தமிழ் மொழியில் கிடைக்கின்றது. இதனைப் பெறுவதற்கு கூகுள் பிளஸ் தளத்தை திறந்து Settings என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து Languages என்பதை கிளிக் செய்யவும். பிறகு அங்கு உள்ள Languages கட்டத்தில் கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான மொழியை தெரிவ செய்யவும்.
இதன் பிறகு உங்களின் கூகுள் பிளஸ் கணக்கை மூடி விட்டு மறுபடியும் திறந்தால் நீங்கள் தெரிவு செய்த மொழிக்கு உங்கள் கூகுள் பிளஸ் கணக்கு மாறி இருக்கும்.
Read more ...

சிறார்களின் இணையப்பாவனை​யை கண்காணிக்க சிறந்த மென்பொருள்



இன்று கல்விபயிலும் சிறார்களின் மிக முக்கியமான பொக்கிஷமாக திகழ்வது இணையம் ஆகும்.
எனினும் சிறுவர்கள் இணையத்தளங்களை பாவிக்கும் போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அவற்றுள் இந்த ஆண்டு வெளியான Max Keylogger எனும் மென்பொருளானது பல விசேட அம்சங்களை கொண்டதாக காணப்படுகின்றது.
Max Keylogger அம்சங்களாவன,
1. அழுத்தப்படும் ஒவ்வொரு Keyஐயும் துல்லியமாக பதிவு செய்தல்.
2. கணணியினுள் உள்நுழைந்த தருணத்திலிருந்து வெளியேறும் வரையான தொழிற்பாடுகளை பதிவு செய்தல்.
3. பேஸ்புக், கூகுள் டோக், யாகூ மெசன்சர் போன்றவற்றினூடு சட்டில் ஈடுபடுவதை பதிவு செய்தல்.
4. பயன்படுத்தும் மின்னஞ்சல் தொடர்பான முழுமையான தகவல்களை சேமித்தல்.
5. பயன்படுத்தும் இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்தல்.
6. தரவிறக்கம் செய்யும் கோப்புக்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளல் போன்றனவாகும்.
Read more ...